சினிமா
சீரியசான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி..! அதுவும் வித்தியாசமான பட தலைப்பில்..

சீரியசான கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரி..! அதுவும் வித்தியாசமான பட தலைப்பில்..
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரதும் மனதில் இடம் பிடித்தார். தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் “மாமன்” என்ற படத்தில் சூரி நடித்துள்ளார் இப்படம் மே 16ம் தேதி திரைக்கு வர இருக்கின்றது. மேலும் பல படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கும் இவர் அடுத்து எல் ரன் குமார் தயாரிப்பில் இவர் நடிக்க உள்ளார். இப் படத்தின் தலைப்பை படக்குழு “மண்டாடி ” என வைத்துள்ளனர். இதன் அர்த்தம் கடலில் மீன்கள் அதிகம் காணப்படும் மீன் வழி பாதையை அறிந்து வழி காட்டுபவர்களை இவ்வாறு அழைப்பார்கள் என குறிப்பிடப்படுள்ளது.இந்த படத்தின் டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சூரி ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி இவர் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.