இலங்கை
தமிழ்த் தலைவர்கள் அறுகதையற்றவர்களா? செல்வம் அடைக்கலநாதன் பதிலடி

தமிழ்த் தலைவர்கள் அறுகதையற்றவர்களா? செல்வம் அடைக்கலநாதன் பதிலடி
தமிழ் தலைவர்கள் கேள்வி எழுப்புவதற்கு அருகதையற்றவர்கள் என்று கூறும் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க, தமிழ் மக்களுக்காக எந்த தீர்வுகளையும் முன்வைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம், அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட சகலவற்றிலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராகவே உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்…