சினிமா
திருமணத்திற்கு பின் வேலை இழக்கிறாரா விஜே பிரியங்கா!! விஜய் டிவி எடுத்த முடிவு…

திருமணத்திற்கு பின் வேலை இழக்கிறாரா விஜே பிரியங்கா!! விஜய் டிவி எடுத்த முடிவு…
விஜே பிரியங்கா, டிஜே வசி என்பவரை திடீரென ஏப்ரல் 16 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்திற்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தாலும், சிலர் ஏன் திடீர் திருமணம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் பிரியங்கா – வசி திருமணத்திற்கு, விஜய் டிவி பிரபலங்கள், அமீர், பாவ்னி ரெட்டி, நிரூப், அன்ஷிதா, மதுமிதா, சுனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரியங்காவின் திடீர் திருமணம் குறித்து சில நாட்களாகவே ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி, கலர்ஸ் நிறுவனத்திற்கு கைமாற இருப்பதாலும், ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்து ஜியோ ஹாட்ஸ்டாராக ஸ்ட்ரீமிங் ஆகிவருகிறது.ஜியோவுடன் ஏற்கனவே கலர்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சியை கலர்ஸ் நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கியுள்ளதாகவும் விரைவில் விஜய் தொலைக்காட்சியின் லோகாவும் மாற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.இதனால் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றும் தொகுப்பாளர்களை நிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. அதில் முக்கிய தொகுப்பாளர்கள், நீயா நானா கோபிநாத், பிரியங்கா தேஷ்பாண்டே, மாகாபா ஆனந்த் உள்ளிட்டவர்கள் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.