பொழுதுபோக்கு
மாடர்ன் உடை, கூலிங் க்ளாஸ் அசத்தல்; சிறகடிக்க ஆசை நடிகை மலேசிய க்ளிக்ஸ்!

மாடர்ன் உடை, கூலிங் க்ளாஸ் அசத்தல்; சிறகடிக்க ஆசை நடிகை மலேசிய க்ளிக்ஸ்!
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கோமதி ப்ரியா. இந்த சுந்தரவள்ளி என்ற கேரக்டரில் இவரது நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 10 மாதங்கள் சென்னையில் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.அதனைத் தொடர்ந்து அவருக்கு கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார்.விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த கோமதி ப்ரியா தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரிலும் நடித்தார்.வேலைக்காரன் சீரியல் முடிந்துவிட்ட நிலையில், விஜய் டிவியின் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற தொடரில் கோமதி ப்ரியா லீடு ரோலில் நடித்து வருகிறார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கோமதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றன,அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.