இலங்கை
மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் ; அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் ; அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம்
மாத்தறை சிறைச்சாலையில் இன்று (22) பிற்பகல் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நிலைமையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அமைதியின்மை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியை வேறு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டது.
ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த கைதிகள் குழு ஒன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதற்றமாக நடந்து கொண்டதாகவும், அதன்படி, நிலைமையைக் கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.