Connect with us

பொழுதுபோக்கு

முத்து கொடுத்த பதிலடி; விஜயாவுக்கு மனோஜ் வைத்த செக்: ரோஹினிக்கு உதவும் மீனா

Published

on

siragadikka aasai March 29.jpg

Loading

முத்து கொடுத்த பதிலடி; விஜயாவுக்கு மனோஜ் வைத்த செக்: ரோஹினிக்கு உதவும் மீனா

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் காய்ச்சலால் அவதிப்பட, அவனுக்கு மருந்து கொடுக்கும் ரோஹினி, அருகில் அமர்ந்து அழுகிறாள். இதை பார்த்த மனோஜ் என்ன என்று கேட்க, நீ என்ட பேசவே மாட்ட என்று நினைத்தேன். ஆனால் இப்போ பேசிட்டே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறாள். அதன்பிறகு இருவரும் தூங்கிவிடுகின்றனர்.அடுத்து காலையில் ரவி ஸ்ருதியிடம் போய் பேச, என்னை ஹரஸ்மெண்ட் பண்ணவங்கள நீ ஒன்னுமே கேட்கலையே என்று ஸ்ருதி கோபப்பட, நீ என்னிடம் முதலில் சொல்லவில்லை. அதனால் நீ செய்தது தப்பு என்று ரவி சொல்ல, இருவருக்கும வாக்குவாதம் ஆகிறது. அதன்பிறகு ரவியின் ஓனர் போன் செய்து ஸ்ருதியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்க, உங்களுக்காகவது புரிந்ததே அதுவரைக்கும் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி ஸ்ருதி போனை வைக்கிறாள்.அதன்பிறகு, ரவியும் ஸ்ருதியிடம மன்னிப்பு கேட்க, உங்க ஓனர் கேட்டால் தான் நீ மன்னிப்பு கேட்பியா? என்று ஸ்ருதி கோபப்பட, இருவருக்கும் ஒரு வழியாக சமாதானம் ஆகின்றனர். அடுத்து முத்து வீட்டுக்கு வராதது குறித்து மீனா யோசித்துக்கொண்டிருக்க, அண்ணாமலை முத்து பற்றி விசாரிக்கிறார். அவர் சவாரி போயிருப்பார் மாமா என்று மீனா சொல்ல, போன் பண்ணி கேளு என்று அண்ணாமலை சொல்ல, மீனா முத்துவுக்கு போன் செய்து கேட்கிறாள். முத்து நான் சவாரி வந்திருக்கேன். அப்பாக்கிட்ட சொல்லிடு என்று சொல்லி போனை வைக்கிறான்.மறுநாள், ரோஹினி சமைத்துக்கொண்டிருக்க, அங்கு வரும் மீனா என்ட சொல்லிருந்தா நான் சமைத்து கொடுத்திருப்பேனே என்று சொல்ல, நீங்க செய்துகொடுத்துட்டாலும் என்று ரோஹினி சொல்ல, இந்த வீட்டில் அத்தை என்னை மட்டும் தான் திட்டிகிட்டு இருந்தாங்க என்று மீனா சொல்ல, இப்போ என்னையும் திட்டுவதை பார்த்து உங்களுக்கு சந்தோஷமா இருக்கா என்று கேட்கிறாள் ரோஹினி. நீங்க பார்வதி ஆண்டிக்கிட்ட பேசி, அத்தைக்கிட்ட பக்குவமாக பேசி புரிய வைக்க சொல்லுங்க, அதை சொல்லத்தான் வந்தேன் என்று சொல்லிவிட்டு மீனா கிளம்புகிறாள்.அடுத்து காபி கேட்டு விஜயா கிச்சனுக்கு வர, ரோஹினி கஞ்சி வைப்பதை பார்த்து யாருக்கு இது என்று கேட்கிறாள். மனோஜ்க்கு காய்ச்சல் என்று ரோஹினி சொல்ல, விஜயா மனோஜை விசாரிக்க, ரோஹினியிடம் பேசாததால் தான் எனக்கு காய்ச்சல் வந்திருக்குமோ என்று மனோஜ் சொல்ல விஜயா கோபப்டுகிறாள். நீ அவள் புருஷன், உன்னை ஏமாற்றி இருக்கிறாள். அதனால் நீ அவளை மன்னிக்கவே கூடாது என்று விஜயா மனோஜ்ஜிடம் சொல்ல, மனோஜ் ரோஹினிக்கு சப்போர்ட்டாக பேசுகிறான்.அதன்பிறகு, ஹாலில் அண்ணாமலை விஜயா உட்கார்ந்திருக்க, முத்து வீட்டுக்கு வருகிறான். ஏன் நைட் வீட்டுக்கு வரல என்று அண்ணாமலை கேட்க, நீங்கதான் குடிச்சா வீட்டுக்கு வராதனு சொன்னீங்களே அதனாலதான் வரல என்று விஜயா சொல்ல, நான் சவாரி போனேன் அதான் வரல என்று முத்து சொல்கிறான். வீட்டில் பொண்டாட்டி இருப்பதை நினைத்து பார்த்தியா என்று அண்ணாமலை கேட்க, அவ முகத்தை பார்க்க பிடிக்காமதான் அவன் வரல என்று விஜயா சொல்ல, இதனால் தான் நீ டிரெய்ன் ஓட்ட நைட் டூட்டி போனியாப்பா என்று முத்து கேட்க, விஜயா கோபமாகிறாள் அத்துடன் எபிசோடு முடிகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன