இலங்கை
யாழில் இளைஞனின் முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி

யாழில் இளைஞனின் முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சி
யாழ் ஆரியகுளம் சந்தியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இன்று காலை துாக்கில் தொங்கி நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் ஆட்டோ ஒன்றில் வந்து அந்த வெற்றுக் காணியில் புகுந்து துாக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இளைஞனைக் காணவில்லை என அவனது அண்ணன் தேடியுள்ளார்.
இதன் போது இளைஞனின் ஆட்டோ குறித்த பகுதியில் நிற்பதை அவதானி்த்து அங்கு சென்ற போது இளைஞன் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளான்.
இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணப் பொலிசார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.