Connect with us

இலங்கை

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; கொழும்பில் இருந்து வந்த குழு!

Published

on

Loading

யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம்; கொழும்பில் இருந்து வந்த குழு!

  யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந் நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் இயக்கு நிலையை அடையக்கூடிய வகையில், யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கடந்த தை மாதம் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம் அமைக்கப்படும் என கூறியிருந்தார்.

இதன்போது, கடவுச்சீட்டு அலுவலகத்துக்காக மாவட்டச் செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தையும் ஜனாதிபதி பார்வையிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கடவுச்சீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

கடவுச்சீட்டு அலுவலகத்தில், ‘ஒருநாள் சேவைக்கான வலைத்தள சேவைக்கு’ கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து போதியளவு விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.

இதைத் தொடர்ந்து, தென்னிலங்கையில் இருந்து குறித்த சேவை வழங்குநர்கள் பெறப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை கொழும்பில் இருந்து வருகைதந்த விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன