சினிமா
ரசிகர்களுக்குக் கிடைத்த குட்நியூஸ்..! ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் சூப்பர் அப்டேட் இதோ!

ரசிகர்களுக்குக் கிடைத்த குட்நியூஸ்..! ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் சூப்பர் அப்டேட் இதோ!
தமிழ் சினிமாவில் எப்பொழுதும் தனிச்சுவை கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் தான் நடிகர் சசிக்குமார். சமீபத்திய படங்களில் வித்தியாசமான கதைகள், உணர்வு பூர்வமான காட்சிகள், குடும்பச் சூழல்களை மையமாகக் கொண்ட கதைக்களங்களை தேர்ந்தெடுக்கும் சசிக்குமாருக்குப் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், தற்போது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற புதிய திரைப்படத்தில் சசிக்குமார் மற்றும் சிம்ரன் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் ஏப்ரல் 23ம் திகதி வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியாகியவுடன், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.’டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தலைப்பே ரசிகர்களிடம் ஒரு தனி ஆர்வத்தை தூண்டுகிறது. “இது ஒரு குடும்பம் சுற்றுலா செல்லும் கதைதான்!” என்ற புரிதலை ஏற்படுத்திய இப்படம், அந்த எதிர்பார்ப்பை மீறி வாழ்க்கையின் உறவுகள், நகைச்சுவை மற்றும் இரக்கம் ஆகிய அனைத்து உணர்வுகளையும் இணைக்கும் வகையில் அமைந்திருக்கக்கூடும் என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக சசிக்குமார் நடிக்கின்றார். அவருடன் இணைந்து சிம்ரன் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.