பொழுதுபோக்கு
ரியல் எஸ்டேட் மோசடி: மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

ரியல் எஸ்டேட் மோசடி: மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்
அண்மையில், ஹைதராபாத்தில் உள்ள சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனங்களில் அமலாக்காத்துறை சோதனை நடத்தியது. சோதனையில் பகுதியாக சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனங்களில் விளம்பர தூதரான மகேஷ் பாபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.சாய் சூர்யா டெவலப்பர்ஸின் திட்டங்களை விளம்பரப்படுத்தியதற்காக மகேஷ் பாபு, ரூ.5.9 கோடி பெற்றதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ.3.4 கோடி காசோலையாகவும், 2.5 கோடி ரொக்கமாகவும் செலுத்தப்பட்டுள்ளது.ஐதராபாத்தில் உள்ள இந்த 2ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் மக்களிடம் பண மோசடி செய்துள்ளனர். ஒரே இடத்தை பல பேரிடம் விற்றுள்ளது. தகுதி மற்றும் ஒப்புதல் அளிக்காத வீடுகளை விற்று கோடிக்கணக்கில் முன்கூட்டியே பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான இந்த 2 நிறுவனங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.பாக்யநகர் பிராபர்டீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் நரேந்திர சுரானா, சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் சந்திர குப்தா மீது தெலுங்கானா காவல்துறை பதிவு செய்த FIR-களின் அடிப்படையில் ED தனது பணமோசடி விசாரணையைத் தொடங்கியது.சாய் சூர்யா டெவலப்பர்ஸ் திட்டங்களுக்கு நடிகர் மகேஷ்பாபு ஆதரவளித்ததால், பலர் முதலீடு செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் மகேஷ்பாபு ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும், அந்நிறுவனங்களிடம் இருந்து அவர் பெற்ற பணத்தை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏப்.16 ஆம் தேதி நடந்த சோதனைகளில், சுரானா குழுமத் தலைவர் நரேந்திர சுரானா மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் ஆகியோரின் வளாகங்களிலிருந்து ஆவணங்கள், பணம் தொடர்பான ஆதாரங்களை கைப்பற்றப்பட்டன. இதில் ரூ.100 கோடி கணக்கில் வராத பரிவர்த்தனைகள் அடங்கும். மோசடி செய்த பணம் விளம்பர பிரபலங்கள், கட்சிகளுக்கு திருப்பி விடப்பட்டதை ED வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. மோசடி செய்யப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை தயாராகி வருகிறது.