Connect with us

சினிமா

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் சிக்கிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! நடந்தது என்ன..?

Published

on

Loading

ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் சிக்கிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்..! நடந்தது என்ன..?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு, தற்போது ரியல் எஸ்டேட் மோசடி வழக்குத் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தியாவின் அமலாக்கத்துறை மகேஷ்பாபுவுக்கு அதிகாரபூர்வமாக நோட்டீஸ் அனுப்பி, வருகின்ற ஏப்ரல் 27ம் திகதி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்த பரபரப்பான விசாரணையின் மைத்தியில் இரண்டு முக்கிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்நிறுவனங்களாக, சொர்ணா குரூப்ஸ் மற்றும் சாய் சூர்யா டெவலப்பர்ஸ் என்பன காணப்படுகின்றன.இந்த நிறுவனங்கள் மீது பண மோசடி, ஒரே இடத்தை பலருக்கு விற்றது மற்றும் அரச அனுமதி இல்லாத வீடுகளை விற்பனை செய்தது போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனைகள் மேற்கொண்டபோது, நிறுவனங்களின் வரவு செலவுகள், முதலீட்டாளர்கள் விபரம் மற்றும் பிரபலங்களுடன் உள்ள வணிக ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களின் தூதராக இருந்ததாலேயே மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்குச் செலுத்தப்பட்ட தொகைகள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் உள்ளதா என்பதை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது. அமலாக்கத்துறை சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில், மகேஷ்பாபு 27ம் திகதி தங்களது அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன