சினிமா
விஜய் டீவியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த நிறுவனம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டீவியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த நிறுவனம்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
தமிழ் தொலைக்காட்சி உலகில் பல வருடங்களாக முன்னணியில் இருக்கின்ற விஜய் டீவி, தற்போது ஒரு புதிய திருப்பத்தை சந்தித்து வருகின்றது. மக்கள் மனதில் இடம் பிடித்த இந்த டீவி சேனல் தற்போது மல்டிநேஷனல் நிறுவனமான கலர்ஸ் வசம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.முன்னதாக ஹாட்ஸ்டார் எனப்படும் ஸ்ட்ரீமிங் தளத்தின் மூலம், விஜய் டீவி நிகழ்ச்சிகள் அனைவரும் பார்த்து ரசித்து வந்தனர். தற்போது, ஜியோ ஹாட்ஸ்டார் ஆக மாறியதைத் தொடர்ந்து, ஜியோவுடன் ஏற்கனவே இணைந்துள்ள கலர்ஸ் நிறுவனம், தற்போதைய சந்தை நிலையைப் பயன்படுத்தி விஜய் டீவியையும் கைப்பற்றியுள்ளது.உடனடியாக இந்த டீலை உறுதி செய்யும் வகையில், கலர்ஸ் நிறுவனம் ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து விஜய் டீவியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துவிட்டது எனத் தகவல்கள் உறுதியாகியுள்ளது.இந்த விவகாரம் வெளியானவுடனே, பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர். ஏனெனில் விஜய் டீவி என்பது ஒரு தனித்துவமான தொலைக்காட்சி. பிக்பாஸ், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகள் மூலம், குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் பேசப்படும் பெயராக இருந்தது.இந்நிலையில், இத்தனை ஆண்டுக்குப் பின்னர் விஜய் டீவி விற்பனை செய்தது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த உரிமை மாற்றத்தைத் தொடர்ந்து, விஜய் டீவியின் லோகோவும் முழுமையாக மாற்றப்படவுள்ளது.ஏற்கனவே விஜய் டீவியின் சிறப்பு முகமாக இருந்தவர்கள் பிரியங்கா மற்றும் கோபிநாத். இவர்கள் நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, ரசிகர்களின் இதயங்களிலும் இடம்பிடித்திருந்தனர். ஆனால், கலர்ஸ் நிறுவனம் எடுத்துள்ள புதிய முடிவுகளின் அடிப்படையில், இந்த இருவரும் இனி விஜய் டீவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.