பொழுதுபோக்கு
விற்கப்பட்ட விஜய் டி.வி? நிகழ்ச்சிகளுக்கும் எண்ட் கார்டு? நீயா? நானா? வராதா இனிமே?

விற்கப்பட்ட விஜய் டி.வி? நிகழ்ச்சிகளுக்கும் எண்ட் கார்டு? நீயா? நானா? வராதா இனிமே?
தமிழ் சின்னத்திரையில், முன்னணி சேனலாக இருக்கும் விஜய் டிவியை, வேறொரு நிறுவனம் வாங்கிவிட்டதாகவும், இதன் காரணமாக, சேனலில் உள்ள தொகுப்பாளர்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சேனல் விஜய். டிவி. சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி, பிக்பாஸ் உள்ளிட்ட ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து மற்ற சேனலகளும் இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.மேலும், வெற்றி பெற்ற சினிமா படங்களின் டைட்டில்களில் வெளியான விஜய் டிவியின் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று ஹிட்டடித்துள்ளது, அதேபோல், சிவகார்த்திகேயன், இயக்குனர் நெல்சன், சந்தானம், சிவாங்கி, மணிமேகலை, டிடி உள்ளிட்ட பலரும் விஜய் டிவியின் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் பிரபலங்களாக இருக்கின்றனர். அதிலும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக மாறிவிட்டார்.அதேபோல் டாக்டர் ஜெயிலர் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் நெல்சன் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். காமெடி நடிகராக அறிமுகமாக ஹீரோவாக நடித்து வரும் சந்தானமும் விஜய் டிவியின் மூலமாக திரையுலகிற்கு வந்தவர் தான். தற்போது நீயா நானா கோபிநாத், வி.ஜே.பிரியங்கா, மாகாபா ஆனந்த், அறந்தாங்கி நிஷா, ராமர், ஈரோடு மகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர்களாக வலம் வருகின்றனர்.ரியாலிட்டி ஷோவுக்கு பெயர் பெற்ற விஜய் டிவியில் தற்போது 5 நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. விஜய் டிவியின் ஐகான் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சூப்பர் சிங்கர். மாகாபா ஆனந்த், வி.ஜே.பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இமான், பாடகி சித்ரா, பாடகர் மனோ ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். சூப்பர் சிங்கர், பல சீசன்கள் முடித்துள்ள நிலையில், இதில் சீனியர், ஜூனியர் என பல செக்மெண்டகள் நடத்தப்பட்டது.இதனிடையே இந்நிகழ்ச்சி விரைவில் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடந்ததபோலவே நடப்பதால் மக்களிடம் வரவேற்பு இல்லை என்பதால், இந்த நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு, புதிய தொகுப்பாளர்களுடன் புதிய நிகழ்ச்சியை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் வாரந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சியாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியும் விரைவில் நிறுத்தப்படுவதாகவும், இந்நகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி தரும் விஷயமாக, விஜய் டிவி வேறொரு நிறுவனத்திற்கு கைமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது, ஜியோவுடன் ஹாட் ஸ்டார் இணைந்துள்ள நிலையில், இதில் கலர்ஸ் டிவியும் இணைந்துள்ளது. இதன் மூலம் விஜய்டிவியை கலர்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதாகவும், விரைவில் விஜய் டிவி லோகே மாற்றப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அந்நிறுவனத்தில் தொகுப்பாளாகளாக பணியாற்றி வரும் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.