இலங்கை
IPL 2025 ; அணி தலைவரினை இழக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

IPL 2025 ; அணி தலைவரினை இழக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி
2025 ஆம் ஆண்டிற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்று வரும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது தமது அடுத்த போட்டியில் தமது அணித்தலைவரான சஞ்சு சாம்சனுடன் ஆடாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
வயிற்றுப் பகுதியில் உபாதை காரணமாக முன்னதாக இரண்டு போட்டிகளிலிருந்து விலகியிருந்த அவர் இந்தப் போட்டியில் பங்குபற்றமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சஞ்சு சாம்சன் தற்போது குணமடைந்து வருவதாகவும், தெரிவு செய்யப்பட்ட மருத்துவக் குழுவினால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அவர் முழுமையாகக் குணமடைவதற்கான காலம் குறித்து எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.
இந்தநிலையில், சஞ்சு சாம்சன் பங்கேற்காத போட்டிகளில் ரியான் பராக் அணித்தலைவராக செயற்படுகின்றார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் பங்கேற்கும் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளது