விளையாட்டு
LSG vs DC LIVE Cricket Score: பதிலடி கொடுக்குமா லக்னோ? டெல்லியுடன் இன்று மோதல்

LSG vs DC LIVE Cricket Score: பதிலடி கொடுக்குமா லக்னோ? டெல்லியுடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 40-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: LSG vs DC LIVE Cricket Score, IPL 2025நடப்பு தொடரில் இதுவரை ஆடியுள்ள 8 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 3-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் லக்னோ அணி புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறது. அதேநேரத்தில், இதுவரை ஆடியுள்ள 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி என 10 புள்ளிகளுடன் டெல்லி அணி பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறது. இந்த தொடரில் தொடர்ந்து முன்னேற இந்தப் போட்டி லக்னோவுக்கு முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் ஆடுவதால், கூடுதல் உற்சாகத்துடன் அந்த அணி களமாடும். மேலும், டெல்லியிடம் ஏற்கனவே பெற்ற தோல்விக்குப் பதிலடி கொடுக்க நினைக்கும். இருப்பினும், டெல்லி அணி அதனை தடுத்து முன்னேறவே முயலும், அந்த அணி சில அதிர்ச்சி தோல்விகளைப் பெற்றாலும், தொடர் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. நேருக்கு நேர் ஐ.பி.எல் தொடரில் லக்னோ மற்றும் டெல்லி அணிகள் இதுவரை 6 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 3 முறை வென்றுள்ளன. அதனால், இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.