தொழில்நுட்பம்
அதிரடியாக களமிறங்கிய சியோமி… ரூ. 6,500 பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்போன்; இவ்வளவு அம்சங்கள் இருக்கு மக்களே!

அதிரடியாக களமிறங்கிய சியோமி… ரூ. 6,500 பட்ஜெட்டில் இந்த ஸ்மார்ட்போன்; இவ்வளவு அம்சங்கள் இருக்கு மக்களே!
பட்ஜெட் விலையில் அசத்தலான அம்சங்களுடன் சியோமி ரெட்மி ஏ5 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. சீனாவை சேர்ந்த பிரபல மின்னணுவியல் நிறுவனமான சியோமியின் துணை பிராண்ட்தான் ரெட்மி. 2013-ஆம் ஆண்டு முதல் குறைந்த விலையில் தரமான ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் ரெட்மி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி ஏ5-ஐ களமிறக்கியுள்ளது.இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை கடந்த ஏப்ரல் 16 ஆம் தி முதல் இந்திய சந்தையில் துவங்கியுள்ளது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் அமேசான், எம்ஐ.காம், ஃபிளிப்கார்ட் மற்றும் அனைத்து முன்னணி சில்லறை விற்பனைநிலையங்களிலும் இந்த போனை வாங்கிக்கொள்ளலாம்.Redmi A5 | Price & Specifications | Xiaomi Indiaரெட்மி A5-ன் சிறப்பம்சங்கள்:6.88 இன்ச் HD+ டிஸ்ப்ளேவுடன் சிறந்த காட்சி அனுபவம். அதிநவீன ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம் மற்றும் 2 வருட ஓஎஸ் அப்டேட் உத்தரவாதம். வேகமான மற்றும் திறமையான செயல்பாட்டிற்கு ஆக்டா-கோர் Unisoc T7250 ப்ராஸஸர். தெளிவான மற்றும் துல்லியமான புகைப்படங்களுக்கு 32 மெகாபிக்சல் பிரதான கேமரா. அட்டகாசமான செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் முன்புற கேமரா. அதிவேக 4ஜி நெட்வொர்க் வசதி. நவீன யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 15 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு. நீடித்து உழைக்கும் 5200mAh பேட்டரி. 3ஜிபி, 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி / 128 ஜிபி உள்ளடக்க சேமிப்பு விருப்பங்கள். இதன் ஆரம்ப விலை ரூ.6,499 முதல் கிடைக்கிறது.ரெட்மி A5 ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும் சிறந்த அம்சங்களையும் விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.