சினிமா
“என்ன வாழ வச்சவர் அவர் தான்..” காமெடி நடிகர் வடிவேலு பேட்டி..

“என்ன வாழ வச்சவர் அவர் தான்..” காமெடி நடிகர் வடிவேலு பேட்டி..
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து வரும் நடிகர் வடிவேலு சமீபகாலங்களாக பெரிதும் படங்களில் நடிப்பது குறைந்துள்ளது. இடையில் ஹீரோவாக ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பினை பெறவில்லை அதுமட்டுமல்லாமல் இவரை இனிமேல் சினிமாவில் பார்க்கமுடியாது படங்கள் ஏதும் நடிக்கவில்லை எனும் தகவல்களும் வெளியாகி இருந்தது.இந்த நிலையில் தற்போது வடிவேலு சுந்தர்சி இயக்கத்தில் அவருடன் இணைந்து கேங்கேர்ஸ் எனும் படத்தில் நடித்து வருகின்றார். படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக இடம்பெற்று வரும் நிலையில் நாளை படத்திற்கான bts வீடியோ ஒன்று வெளியாகவுள்ளதாக தெரியவந்துள்ளது.மேலும் தற்போது வடிவேல் நேர்காணல் ஒன்றில் கதைத்த விடயம் வைரலாகியுள்ளது. அதாவது அவர் குறித்த நேர்காணலில் “சினிமாவுக்கு வந்த நாலு வருஷம் அவர் ஆபீஸ்லயே வச்சி வாழ வச்சவர் அவர் தான். சினிமால என்ன தூக்கி கொண்டு வந்தவர் அவர் தான். அவர் தான் என் கடவுள். அதுக்கு அப்புறம் கமல் சாரோட தேவர் மகன் தான் என் டர்னிங் பாயிண்ட். தேவர் மகன் படம் வரைக்கும் ராஜ்கிரண் ஐயா ஆபீஸ்ல தான் இருந்தேன். அவரோட 6 படம் 7 படம் சம்பளம் இல்லாம தான் நடிச்சேன்” என கூறியுள்ளார்.