Connect with us

பொழுதுபோக்கு

குழந்தையை கலைக்க நினைக்கும் மாமனார்; மனைவியை சந்தேகப்படும் கணவன்: ஜீ தமிழ் சீரியலில் இன்று

Published

on

Kett anna

Loading

குழந்தையை கலைக்க நினைக்கும் மாமனார்; மனைவியை சந்தேகப்படும் கணவன்: ஜீ தமிழ் சீரியலில் இன்று

கடத்தப்படும் ரேவதி.. மாயா செய்த சூழ்ச்சி, கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக், ரேவதி பார்ட்டிக்கு வந்திருந்த நிலையில் இன்று, மாயா பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்து ஜூஸில் போதை மருந்தை கலக்குகிறாள். சர்வெண்ட் ஒருவனிடம் இந்த ஜூஸை கார்த்திக்கு கொடு என்று சொல்லி அனுப்புகிறாள். ஆனால் ரேவதி தவறுதலாக அந்த ஜூஸை குடித்து விட்டு போதையில் தள்ளாட தொடங்குகிறாள். பார்ட்டி முடிந்ததும் கார்த்தி மற்றும் ரேவதி என இருவரும் கிளம்பி ரூமுக்கு வருகின்றனர்.ரூமுக்கு வந்த ரேவதி எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை என்று புலம்பி வாந்தி எடுத்து தூங்கி விடுகிறாள். அடுத்த நாள் காலையில் கண் விழிக்க அவளது உடை மாறி இருக்க ரேவதி இது எப்படி நடந்தது என ஷாக் ஆகிறாள். கார்த்தி தான் காரணமாக இருக்க வேண்டும் என அவனிடம் கோபப்படுகிறாள். பிறகு ஒரு பெண்மணி காபி கொண்டு வந்து குடிங்க மா தலைவலிக்கு நல்லா இருக்கும் என்று சொல்கிறாள். ரேவதி எனக்கு தலை வலிக்குது உனக்கு யார் சொன்னது என்று கேட்கிறாள்.பிறகு அந்த பெண்மணி நைட் கார்த்தி தன்னை கூப்பிட்டு உங்களுக்கு உடை மாற்றி விட சொன்னதாக நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரேவதி பதில் பேச முடியாமல் நான் மாத்திரை வாங்க போறேன் என்று மெடிக்கல் ஷாப் கிளம்பி வருகிறாள். மாயா ஏற்பாடு செய்த ஆட்கள் ரேவதியை கடத்துகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பாக்கியத்தை ஏற்றி விடும் சௌந்தரபாண்டி.. சண்முகத்துக்கு உருவாகும் சந்தேகம் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா வைஜெயந்தி வந்ததும் வேலையில் சேர்ந்த நிலையில் இன்று, இசக்கியை ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஸ் செய்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். வேலையில் சேர்ந்த வீரா சந்தோசமாக வீட்டிற்கு வருகிறாள். இசக்கி முடியாமல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் நடந்த விஷயத்தை கேட்டு நீ வேலை செய்யாமல் இருக்க மாட்டியா என்று திட்டுகிறாள். இசக்கி வேலை செய்யாமல் எப்படி இருக்க முடியும் என்று வீரா இனிமே இப்படி பண்ணாத ஒழுங்கா ரெஸ்ட் எடு என்று சொல்கிறாள்.அடுத்து சண்முகம் ரூமுக்கு வந்து பரணிக்கு நன்றி சொல்கிறான். பரணி இது என்னுடைய கடமை என்று சொல்கிறாள். என் குடும்பத்தில் என்ன பிரச்சனையா இருந்தாலும் நீ வந்து நிற்கிற என்று சொல்ல உன் தங்கச்சிகளுக்குனு சொல்லு என்று பரணி பதில் கொடுக்கிறாள். தங்கைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தனக்கும் கொடுக்கவில்லை என்று பரணி வருத்தத்தை பதிவு செய்கிறாள்.இன்னொரு பக்கம் சௌந்தரபாண்டி மற்றும் பாண்டியம்மா ஆகியோர் கூட்டு சேர்ந்து அடுத்து என்ன பண்ணுவது என்று யோசிக்கின்றனர். சௌந்தரபாண்டி நான் குழந்தையை பூமிக்கு வர விட மாட்டேன். அதுக்கு முதல்ல அந்த இசக்கி இந்த வீட்டிற்கு வரணும். பாக்கியத்தை எப்படியாவது ஏற்றி விட்டு அவளை இங்க கூட்டிட்டு வர வைக்கணும். அந்த குழந்தை கலைந்தாலும் நம்ம மேல பழி வராது. அதுக்கு தான் அந்த குடும்பத்துல முதல் வாரிசு தங்காதுனு முன்னாடியே நம்ப வைத்தேன் என்று சொல்கிறார்.பிறகு பாக்கியம் வர சௌந்தரபாண்டி இசக்கி எப்படி இருக்காளாம் என்று நலம் விசாரிக்கிறார். உன் மருமகள் உன் கண்ணு முன்னாடி இருந்தா நீ நிம்மதியா இருக்கலாம்ல. அவங்க அங்க இருக்கிறதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு என்று கேட்கிறார். பாக்கியம் சௌந்தரபாண்டி சொல்றது சரி என யோசித்தாலும் அதே சமயம் அவளுக்கு சிறு சந்தேகமும் இருக்கிறது. பாக்கியமும் இசக்கி தன்னோட இருந்தால் நல்லா இருக்கும் என யோசிக்கிறாள். இதனை தொடர்ந்து அடுத்த நாள் வீரா வேலைக்கு பெருசா ஈடுபாடு இல்லாமல் கிளம்ப இதை பார்த்த சண்முகம் பிடிச்ச வேலைக்கு போக ஏன் இப்படி வித்திருப்பமில்லாமல் போறா என்று சந்தேகம் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கவினிடமிருந்து தப்பித்த மகேஷ்.. காதலுக்கு நோ சொன்ன துளசி – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட் கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்க கவின் அது அஞ்சலி புருஷன் என்பதை அறிந்து கொண்ட நிலையில் இன்று மகேசுக்கு தன்னை அடையாளம் காட்டி மாட்டி விட்டு விடுவார்களா என்ற பயம் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சமயத்தில் ஸ்டேஷனுக்கு வந்த ஒரு பெரிய பிசினஸ்மேன் என்ன சார் நீங்க எங்கே இருக்கீங்க? அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா என்று மகேஷ் குறித்து பெருமையாக பேசுகிறார்.பிறகு மகேஷ் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல சார் எல்லாம் ரூல்ஸ் பண்ண ஆரம்பிக்கலாம் என்று சொல்லி மாஸ் போட்டுக் கொள்ள கவின் இவர் இல்லை என்று சொல்ல மகேஷ் நிம்மதி அடைகிறான். பிறகு அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வருகிறான். அடுத்ததாக வெற்றி துளசிக்கு போன் செய்ய துளசி என்ன சார் இரண்டு நாளா போன் இல்ல என்று விசாரிக்கிறாள். அந்த எம்எல்ஏ பையன் இன்னமும் உங்களின் தொடர்ந்து வரானா என்று கேட்க துளசி தினமும் ஆபீசுக்கு வந்து தொல்லை தரான் என்று சொல்கிறாள்.வெற்றி அப்படி என்றால் அவனுக்குள்ள ஏதோ ஒன்னு இருக்கு என்று சொல்ல துளசி நீங்க சொல்ல வரது புரியுது ஆனா அதெல்லாம் எனக்கு செட்டாகாது என்று சொல்கிறாள். அதனைத் தொடர்ந்து கவின் வீட்டுக்கு வர அவளுடைய அம்மா அப்பா எங்கடா போயிருந்த என்று விசாரிக்க ஸ்டேஷனில் நடந்த விஷயங்களை சொல்ல யாரோ என்னமோ பண்ணிட்டு போறாங்க உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை.. இந்த மாதிரி தலையிடாதே என்று எச்சரிக்கின்றனர்.இன்னொரு பக்கம் லட்சுமியும் சிவராமனும் பேசிக் கொண்டிருக்க லட்சுமி தியாவை ஒரு ஸ்கூல்ல சேர்க்கணும் சிவராமன் பெரிய ஸ்கூல்ல சேர்க்கணும் என்று சொல்ல சிவராமன் பெரிய ஸ்கூல்லையே சேர்த்து விடலாம் என்று சொல்கிறார். கால் சரியானதும் சேர்க்கலாம் என்று இருந்ததாக சொல்ல லட்சுமி தியா ஸ்கூலுக்கு போனாதான் நாலு பசங்களோட பேசி சந்தோஷமா இருப்பா என்று சொல்ல அப்படின்னா நாளைக்கே சேர்த்து விடலாம் என்று சொல்கிறார். ஆனால் பணத்திற்கு என்ன செய்வது என சிவராமன் யோசனையில் இருக்கிறார். அடுத்த நாள் ஒரு பெரிய ஸ்கூலுக்கு சென்று விசாரிக்க அவர்கள் டொனேஷன் கேட்டு அட்மிஷன் இல்லை என சொல்லி விடுகின்றனர். வீட்டுக்கு வர வெற்றி எதிரில் வருகிறான். ஸ்கூலில் நடந்த விஷயங்கள் தெரிந்து ஸ்கூலுக்கு சென்று பேச தியாவிற்கு சீட்டு தருவதாக அவர்களே போன் செய்து சிவராமனுக்கு தகவல் கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன