சினிமா
சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! தளபதி விஜய் பாடலைபாடி அதிர வைத்த திவினேஷ்..

சரிகமப லிட்டில் சாம்ஸ் 4!! தளபதி விஜய் பாடலைபாடி அதிர வைத்த திவினேஷ்..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாப்ஸ். இந்நிகழ்ச்சியில் 4வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்காக ஏற்கனவே, ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கடந்த வாரம் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியும் DJD Reloaded 3 நிகழ்ச்சியும் இணைந்து மகா சங்கமம் நடைபெற்றுள்ளது.இந்நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 இறுதி சுற்று போட்டியாளரான திவினேஷ், எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு ட்ரெண்ட்டான பாடலை பாடி அசத்தியுள்ளர். நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் ’நெஞ்சுக்குள்ள குடியிருக்கும்’ பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு அவர் அந்த பாடலை பாடியதை பார்த்த பலர் பிரம்மித்துபோயுள்ளனர். இதை திவினேஷிடம் இருந்து எதிர்ப்பார்க்கவில்லை என்று ரசிகர்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.