இலங்கை
சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதிகளால் பரபரப்பு ; சிக்கிய பெரும் ஆபத்தான பொருட்கள்

சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட மர்ம பொதிகளால் பரபரப்பு ; சிக்கிய பெரும் ஆபத்தான பொருட்கள்
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட பொதிகளிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் சிலர் கடந்த 20 ஆம் திகதி இரவு கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கூரை வழியாக சிறைச்சாலைக்குள் இரண்டு பொதிகளை வீசி சென்றுள்ளனர்.
இதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பொதிகளை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, இந்த பொதிகளிலிருந்து 02 கையடக்கத் தொலைபேசிகள், 05 டேட்டா கேபிள்கள், 10 போதை மாத்திரைகள் 05 புகையிலை மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பன சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்டப்டுள்ளன.
இது தொடர்பில் பொறளை பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.