சினிமா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதில் இனி இவர் தான்..!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதில் இனி இவர் தான்..!
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா என்பவர்களின் நகைச்சுவையான பேச்சிற்கு ரசிகர்கள் அதிகம் என்றே சொல்லலாம் இந்த நிலையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது இதில் பாடகர்கள் மனோ, சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் நடுவராக உள்ளனர். இந்த வாரம் பிரியங்காவின் திருமணம் முடிந்த காரணத்தால் அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதில்லை எனவே அவருக்கு பதிலாக ‘மகாநதி’ சீரியலில் புகழ்பெற்ற நடிகை லட்சுமி பிரியா மா கா பா ஆனந்துடன் இணைந்து இந்த வாரம் தொகுப்பாளினியாக வரப்போகிறார். இதன் விளக்கமாக விஜய் டிவி புரொமோ வீடியோவை வெளியிட்டு லட்சுமி பிரியா பங்கு பெறுவதை அறிவித்துள்ளது. ‘மகாநதி’ சீரியலில் தனது சூப்பரான நடிப்பினால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த லட்சுமி பிரியா இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆக உள்ளார்.