சினிமா
திருமணத்திற்கு அழைக்காத அமீர் – பாவ்னி? பிக்பாஸ் ஐசு விளக்கம்..

திருமணத்திற்கு அழைக்காத அமீர் – பாவ்னி? பிக்பாஸ் ஐசு விளக்கம்..
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக பங்கேற்று தற்போது ரியல் ஜோடியாக மாறியிருக்கிறார்கள் அமீர் – பாவ்னி ரெட்டி. பிக்பாஸ் சீசன் 5ல் இருவரும் காதலித்து வந்த நிலையில் நேற்று இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.இவர்களின் திருமணத்திற்கு விஜய் டிவியை சேர்ந்த பலரும் பங்கேற்ற நிலையில், பிரியங்கா திருமணத்திற்கு வராதா மாகாபா ஆனந்தும் இவர்கள் திருமணத்திற்கு வரவில்லை.மேலும் அமீருக்கு நெருக்கமான உறவினரான பிக்பாஸ் ஐசு மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்துக்கொள்ளவில்லை. இதற்கு என்ன காரணம் என்று ஐசு மற்றும் அவரது தந்தை இணையத்தில் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.ஐசு பகிர்ந்த பதிவில், நாம் இங்கே நம் வேலைகளைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் போது தவறான எண்ணங்களையும், தவறான தீர்ப்புகளையும் பெற்றுக்கொள்வது மிகவும் கடினம். நாங்களும் மனிதர்கள் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.ஒரு கதையின் மறுப்பக்கத்தை பற்றி வெளிப்படையாக பேச விரும்பினால் நம்மால் முடியும், ஆனால் நாம் பேசாமல் இருக்க விரும்புகிறோம்.எனவே உங்களுக்கு தெரியாத ஒன்றைப்பற்றி கருத்து தெரிவிக்க வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் தயவு செய்து அடுத்தவர்களுடைய மனநிலையையும் புர்ந்து கொண்டு நடப்பீர்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்திருக்கிறார் ஐசு.