Connect with us

பொழுதுபோக்கு

நெப்போலியன் கொடுத்த புகார்: தனுஷ் குறித்த அவதூறு வீடியோக்களை நீக்கும் பணியில் நெல்லை போலீஸ்

Published

on

Nepoleon Family

Loading

நெப்போலியன் கொடுத்த புகார்: தனுஷ் குறித்த அவதூறு வீடியோக்களை நீக்கும் பணியில் நெல்லை போலீஸ்

நடிகர் நெப்போலியனின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், நெப்போலியனின் மகன், தொடாபான அவதூறு வீடியோக்களை சமூகவலைதளங்களில் அகற்கும் பணியில் நெல்லை காவல்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது.தமிழ் சினிமாவில், ஹீரோ வில்லன், குணச்சித்திர நடிகர், என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நெப்போலியன். சினிமாவில் முன்னணி வேடத்தில் நடித்து கொண்டிருக்கும் போதே  திமுக கட்சியில் இணைந்த நெப்போலியன், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். நெப்போலியனுக்கு இரு மகன்கள் உள்ளனர்.  இதில் மூத்த மகன்,  தனுஷுக்கு சிறுவயதிலிருந்தே, தசை சிதைவு நோய் இருந்தது.3 வயதில் இந்த பிரச்சனை கண்டறியப்பட்ட நிலையில், 10 வயதில் முழுவதுமாக நடக்க முடியாமல் போனது. ஆயுர் வேத சிகிச்சை முறையில், ஓரளவு கட்டுக்குள் வந்த போதும் மேல் சிகிச்சைக்காக குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆனார் நெப்போலியன். இதனிடையே, தன்னுடைய மகன் தனுஷ் திருமண வயதை எட்டியதும், திருநெல்வேலியை சேர்ந்த உறவினர் பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.அதன்படி தனுஷ் – அக்ஷயா திருமணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜப்பானில் தமிழ் கலாச்சாரத்தின் படி வெகு விமர்சியாக நடந்து முடித்துள்ளது. இந்த திருமணம் தொடர்பான செய்திகள் வெளியானபோது, பலரும் வாழ்த்துக்களை கூறிய நிலையில், சமூகவலைதளங்களில் ட்ரோல்களையும் செய்து வந்தனர். ஆனால் இந்த ட்ரோல்களை கண்டுகொள்ளாத நெப்போலியன் தனது மகன் திருமணத்தை சிறப்பாக நடித்தி முடித்திருந்தார்.தற்போது நெப்போலியனின் மகன் தனுஷ் – மருமகள் அக்சயா இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வரும் நிலையில்,  அவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டது. இதனையடுத்து, நெப்போலியன் தரப்பில் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்துள்ள நெல்லை காவல்துறை, அவதூறு பரப்பும் வகையில் யூடியூப்பில் உள்ள வீடியோக்களை அகற்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வீடியோ பதிவேற்றம் செய்த, யூடியூப் சேனலின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை காவலர்கள் திரட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன