Connect with us

வணிகம்

மூத்த குடிமக்களுக்கான போஸ்ட் ஆபீஸ் வைப்பு நிதி திட்டம்; லேட்டஸ்ட் வட்டி விகிதங்கள் இதோ

Published

on

Senior Citizen FD

Loading

மூத்த குடிமக்களுக்கான போஸ்ட் ஆபீஸ் வைப்பு நிதி திட்டம்; லேட்டஸ்ட் வட்டி விகிதங்கள் இதோ

பாதுகாப்பான முதலீடு என்பது அனைவருக்கும் தேவையானது. அதிலும், ஓய்வுக்கு பிறகு அமைதியான வாழ்க்கைக்காக நம்பகமான வைப்பு நிதி திட்டங்களை மூத்த குடிமக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அஞ்சல் அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் வைப்பு நிதி திட்டங்களை தேர்வு செய்கின்றனர்.இது மட்டுமின்றி பஜாஜ் ஃபைனான்ஸின் வைப்பு நிதி திட்டங்களிலும் அதிக வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற வைப்பு நிதி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.மூத்த குடிமக்களுக்கான அஞ்சல் அலுவலக வைப்பு நிதி திட்டங்கள்:ஏப்ரல் 2025 நிலவரப்படி, அனைத்து முதலீட்டாளர்களுக்கும் அஞ்சல் அலுவலக வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். மூத்த குடிமக்களுக்கு கூடுதல் பலன்கள் இல்லை.தற்போதைய வட்டி விகிதங்கள்:1 ஆண்டு வைப்பு நிதி: 6.9%2 ஆண்டு வைப்பு நிதி: 7.0% 3 ஆண்டு வைப்பு நிதி: 7.1%5 ஆண்டு வைப்பு நிதி: 7.5%இந்த வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட்டு ஆண்டுதோறும் செலுத்தப்படும். 5 ஆண்டு வைப்புத் தொகையானது பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறத் தகுதியுடையது.எனினும், வைப்பு நிதிகளுக்கு அதிக வட்டி விகிதம் எதிர்பார்க்கும் மூத்த குடிமக்கள் பஜாஜ் ஃபைனான்ஸை பரிசீலிக்கலாம். இதில் மூத்த குடிமக்களுக்கு சுமார் 8.60 சதவீதம் வரை அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது.மூத்த குடிமக்களுக்கான அஞ்சல் அலுவலக வைப்பு நிதிகளின் முக்கிய அம்சங்கள்குறைந்தபட்ச வைப்புத்தொகை: ரூ. 1,000.முதலீட்டில் உச்ச வரம்பு இல்லை.முதிர்வு கால விருப்பங்கள்: 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள்.முன்கூட்டியே திரும்பப் பெறுதல்: குறைக்கப்பட்ட வட்டியுடன்.வாரிசுரிமையை எளிதாக்குவதற்கான நியமன வசதி.அஞ்சல் அலுவலக கிளைகளுக்கு இடையே மாற்றக்கூடிய கணக்குகள்.இந்த அம்சங்கள் எளிதாக இருந்தாலும், மூத்த குடிமக்களுக்கு எந்த விதமான கூடுதல் வட்டி விகிதமும் இதில் சேர்க்கப்படவில்லை. ஆனால், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்றவை வைப்பு நிதிகளுக்கு கூடுதல் வட்டி வழங்குகின்றன. வரி நன்மைகள் மற்றும் தாக்கங்கள்அஞ்சல் அலுவலக வைப்பு நிதிகளில் கிடைக்கும் வட்டிக்கு வரி  விதிக்கப்படும். மூத்த குடிமக்களுக்கு வரிவிதிப்பு எவ்வாறு செயல்படுகிறது என பார்க்கலாம்.பிரிவு 80C: 5 வருட வைப்பு நிதிகளுக்கு ரூ. 1.5 லட்சம் தள்ளுபடி.பிரிவு 80TTB: நீங்கள் ரூ. 50 ஆயிரம் வரை விலக்கு கோரலாம்டி.டி.எஸ்: உங்கள் ஆண்டு வட்டி வருமானம் ரூ. 50,000 மிகாமல் இருந்தால் இது பொருந்தும். இதே வரி விதிகள் பஜாஜ் ஃபைனான்ஸ் வழங்கும் வைப்பு நிதிகளுக்கும் பொருந்தும். இருப்பினும், இந்த வைப்பு நிதிகளில் அதிக வட்டி விகிதம் டி.டி.எஸ் கணக்கிற்குப் பிறகும், வரிக்குப் பிந்தைய சிறந்த வருமானத்திற்கு வழிவகுக்கும்.மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துடன் (SCSS) அஞ்சல் அலுவலக வைப்பு நிதி – ஓர் ஒப்பீடுஅஞ்சல் அலுவலக வைப்பு நிதிகள் குறைந்த ஆபத்துள்ளவை என்றாலும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2% சிறந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. இருப்பினும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் கட்டுப்பாடுகளுடன் வருகிறது. அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ. 30 லட்சம் மற்றும் நிலையான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கவனிக்க வேண்டியவை: எளிமையான செயல்முறை மற்றும் அரசு சார்ந்த திட்டம் என்பதால் அஞ்சல் அலுவலக வைப்பு நிதி திட்டங்களை பெரும்பாலானோர் விரும்புகின்றனர். ஆனால், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி விகிதம் இல்லாத காரணத்தினால்  இது ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மற்றொரு புறம், பஜாஜ் ஃபைனான்ஸ் போன்றவை கூடுதல் வட்டி விகிதங்கள் வழங்குகின்றன. எனவே, பொதுமக்கள் தங்கள் தேவை கருதி முதலீடு செய்யலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன