இலங்கை
யாழ்ப்பாணத்தில் ஹெரோய்னுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோய்னுடன் இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அந்த இளைஞர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களின் உடமையில் இருந்து 620 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.