இலங்கை

விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்; அதிகாரிகள் அதிர்ச்சி!

Published

on

விமானத்தில் இலங்கை வந்த பெரும் ஆபத்தான பொருள்; அதிகாரிகள் அதிர்ச்சி!

   வெளிநாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட போதைப்பொருட்கள் சுங்க அதிகாரிகளால் இன்று (23) கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொதிகளிலிருந்து குஷ் மற்றும் ஹஸிஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 15 கோடியே 45 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்த பொதிகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து விமான தபால் சேவை மூலம் நாட்டுக்கு அனுப்பட்டுள்ளது.

போதைப்பொருட்கள் , நீர்கொழும்பு, கந்தானை, கணேமுல்ல, மாலம்பே மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள பல முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 கிலோ 677 கிராம் குஷ் போதைப்பொருளும் 01 கிலோ 852 கிராம் ஹஸிஸ் போதைப்பொருளுமே கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் பொதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version