Connect with us

பொழுதுபோக்கு

’40 திருமணம் செய்வதாக கூறினேன்- இன்னும் 4 கூட செய்யவில்லை; ஏன் என்னை அசிங்கப்படுத்துறீங்க?’: வனிதா விஜயகுமார்

Published

on

Vanitha Vijayakumar

Loading

’40 திருமணம் செய்வதாக கூறினேன்- இன்னும் 4 கூட செய்யவில்லை; ஏன் என்னை அசிங்கப்படுத்துறீங்க?’: வனிதா விஜயகுமார்

சென்னையில், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார், 40 திருமணம் கூட செய்வதாக கூறிய நான், இன்னும் 4 திருமணங்கள் கூட செய்யவில்லை என்று கலகலப்பாக பேசியுள்ளார்.பழம்பெரும் நடிகர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரது மகள் வனிதா விஜயகுமார். இவர், நடிகர் ராஜ்கிரண் திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன் பின்னர், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் சில திரைப்படங்களில் நடித்தார்.இதைத் தொடர்ந்து, ஆகாஷ் என்பவரை திருமணம் செய்த வனிதா விஜயகுமார், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதன் பின்னர், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தினருடன் இருந்து இவர் விலகி இருக்கிறார். இதனிடையே, பீட்டர் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்தார். எனினும், அவருடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் பிரியும் சூழல் வனிதா விஜயகுமாருக்கு நேர்ந்தது. இதைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், அதன் பின்னர், அநீதி, அந்தகன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.இந்த சூழலில், ‘அலர்ட்’ என்ற திரைப்படத்தில் நடிகை வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார். அப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல் 23) சென்னையில் நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு வனிதா விஜயகுமார் பதிலளித்தார்.அப்போது செய்தியாளர் ஒருவர் வனிதா விஜயகுமாரின் திருமணம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு, “40 திருமணம் கூட நான் செய்வேன் என்று கூறியிருந்தேன். எனது பெஞ்ச்மார்க்கில் இன்னும் 4 திருமணம் கூட வரவில்லை. எதற்காக என்னை அசிங்கப்படுத்துகிறீர்கள்?” என்று கலகலப்பாக அவர் பதிலளித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன