விளையாட்டு
SRH vs MI LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் இழப்பு; அதிர்ச்சியில் ஹைதராபாத்: மிரட்டிய மும்பை பவுலர்கள்

SRH vs MI LIVE Score: அடுத்தடுத்து விக்கெட் இழப்பு; அதிர்ச்சியில் ஹைதராபாத்: மிரட்டிய மும்பை பவுலர்கள்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 41-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆங்கிலத்தில் படிக்கவும்: SRH vs MI LIVE Cricket Score, IPL 2025 நடப்பு தொடரில் ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மறுபுறம், மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் இந்த இரு அணிகளும் தொடர்ந்து முன்னேற கடுமையாக போராடுவார்கள். அதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.அதன்படி, ஹைதராபாத் அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ட்ரவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். ஹைதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ட்ரவிஸ் ஹெட் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதேபோல், அபிஷேக் ஷர்மாவும் 8 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் டெர்ண்ட் போல்ட் வீழ்த்தினார்.அடுத்ததாக களமிறங்கிய இஷன் கிஷானும், நிதிஷ் குமார் ரெட்டியும் முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்ததால், ஹைதராபாத் அணியினர் அதிர்ச்சி அடைந்தது. இவர்கள் இருவரின் விக்கெட்டையும் தீபக் சஹர் கைப்பற்றினார். மேலும், அனிகெட் வெர்மாவையும் 12 ரன்களில், ஹர்திக் பாண்டியா அவுட்டாக்கினார். இந்த சூழலில் க்ளாசன் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.இதனால், ஹைதராபாத் அணி 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்துள்ளது.நேருக்கு ஐ.பி.எல்-லில் ஐதராபாத் – மும்பை அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.