சினிமா
“இனி நீங்க தான் முதலாளி..” kpy பாலா செய்த செயலை பாருங்க..!

“இனி நீங்க தான் முதலாளி..” kpy பாலா செய்த செயலை பாருங்க..!
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதை வென்ற பாலா தான் உழைக்கும் பணத்தை ஏழைகளுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். சமூக சேவையில் ஆர்வம் காட்டி வரும் இவர் பெயரில் இந்தியாவில் பல அம்புலன்ஸ்கள் ஓடுகின்றன இவ்வாறு பல சேவைகளை ஆற்றி வரும் இவர் சினிமாவில் எப்போது நடிப்பார் என பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.இவர் தற்போது ஒரு படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.மேலும் இவர் செய்து வரும் சமூக சேவைகள் அளப்பெரியது தனக்கு வரும் வருமானத்தை வைத்து முடியாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் தற்போது செய்த உதவி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.அதாவது இவர் 40 ஆண்டுகளாக டீ கடையில் வேலை செய்து வந்த தொழிலாளிக்கு டீ கடை வைத்துக்கொடுத்து முதலாளியாக்கி இருக்கிறார். KPY பாலா மேலும் அவர் தனது டீ கடைக்கு பாலாவின் பெயரை வைத்ததோடு கர்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இலவசமாக பால் வழங்க இருக்கிறார் அந்த தொழிலாளி