இலங்கை
இன்று வருதினி ஏகாதசி திதி ; அதிர்ஷ்டம் கிடைக்கனுமா இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள்

இன்று வருதினி ஏகாதசி திதி ; அதிர்ஷ்டம் கிடைக்கனுமா இந்த விஷயங்களை மட்டும் செய்யாதீர்கள்
பெருமாளின் அருளை பெறுவதற்கு ஏற்ற மிக முக்கியமான நாளாக ஏகாதசி இருக்கிறது. இந்த ஏகாதசி நாளில் நாம் விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்தால் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
இந்த வருடத்திற்கான ஏகாதசி திதி இன்றாகும் (ஏப்ரல் 24). அதாவது, ஏப்ரல் 23ம் திகதி பகல் 12.15 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 24ம் திகதி காலை 10.26 வரை ஏகாதசி திதி உள்ளது.
அன்றைய தினம் நாம் சில விதிமுறைகளை பின்பற்றினால் நமக்கு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
1. ஏகாதசி நாள் அன்று பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும். அதிகாலை எழுந்து புனித நீரில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். நம்முடைய உடல் மற்றும் மனம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.
2. கண்டிப்பாக உணவுகளில் அசைவம், வெங்காயம், பூண்டு போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
3. சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். விரதத்தை முழுமையான நம்பிக்கையோடு செய்ய வேண்டும்.
4. அதே போல் அரிசி மற்றும் பருப்பு வகைகளை சாப்பிடக்கூடாது. ஏகாதசி அன்று இவை தடை செய்யப்பட்ட உணவுகள்.
5. நாளைய தினம் துளசி செடியில் தண்ணீர் ஊற்றி பராமரிக்கலாம். ஆனால் நாளைய தினம் மறந்தும் துளசி செடியை பறிக்க கூடாது. அது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயல் ஆகும்.
6. அதே போல், ஏகாதசிக்கு முந்தைய நாள் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால், ஏகாதசி அன்று குளிக்க கூடாது.
7. மிகவும் புனித நூல்களாக கருதப்படும் பகவத் கீதையை படிக்க வேண்டும். கண்டிப்பாக, விஷ்ணுவின் மந்திரங்களை சொல்ல வேண்டும். இதனால் மனம் அமைதியாக இருக்கும்.
8. வழிபாடு செய்ய எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. நெய் பயன்படுத்தலாம். அது தூய்மையானது.
9. துவாதசி அன்று விரதத்தை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும்.
10. கண்டிப்பாக, ஏகாதசி நாளில் தூங்கக்கூடாது. பொய் சொல்ல கூடாது. பிறர் மனம் கஷ்டப்படும் வகையில் பேசக்கூடாது.