Connect with us

பொழுதுபோக்கு

கடத்தப்படும் மனைவி; குழந்தையை பிரிக்க நடக்கும் சதி; கணவன் கண்டுபிடிப்பாரா?

Published

on

Karthigai Deepam Serial Ypdate

Loading

கடத்தப்படும் மனைவி; குழந்தையை பிரிக்க நடக்கும் சதி; கணவன் கண்டுபிடிப்பாரா?

சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி.. சட்டையை பிடித்த முத்துப்பாண்டி – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா டல்லாக வேலைக்கு கிளம்புவதை பார்த்து சண்முகம் சந்தேகமடைந்த நிலையில் இன்று, பரணி என்னை டிராப் பண்ணு வெளியே போகணும் என்று சொல்லி ரெடியாக செல்கிறாள். பரணிக்காக காத்திருந்த சண்முகம் வேண்டா வெறுப்பாக ரெடியாகி வந்த வீராவை டிராப் செய்ய கிளம்புகிறான்.அடுத்து பரணி வீட்டில் விசாவை தேட எங்கும் காணாததால் சண்முகம் தான் எடுத்திருப்பான் என்று சந்தேகம் கொள்கிறாள். அவனுக்கு போன் செய்ய வீராவிடம் பேசி கொண்டே செல்லும் சண்முகம் போனை எடுக்காத காரணத்தால் முத்துபாண்டியும் அப்போ அவன் தான் எடுத்து இருப்பான் என்று நம்புகிறான். மற்றவர்களும் சண்முகம் மீது சந்தேகம் கொள்கின்றனர். வீராவை இறக்கி விட்ட பிறகு அவனுக்கு மீண்டும் போன் வர போனை எடுத்ததும் எங்கடா போன என்று கேட்கிறாள்.வீராவை டிராப் செய்ய வந்ததாக சொல்ல உடனே வீட்டிற்கு வா என்று சொல்கிறாள். சண்முகம் வீட்டிற்கு போக பரணி ஏண்டா இப்படி பண்ண என்று கேட்க ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைகிறான். ஒரு கட்டத்தில் பரணி ஏண்டா விசாவை எடுத்த என்று கேட்க சண்முகம் எனக்கு தெரியாது என்று சொல்கிறான், முத்துப்பாண்டி கோபப்பட்டு சண்முகம் சட்டையை பிடிக்கிறான்.இந்த சமயத்தில் கனி நிறுத்துங்க அண்ணியோட விசாவை நான் தான் எடுத்தேன் என்று கொண்டு வந்து கொடுக்கிறாள்.  இதனால் பரணி மற்றும் முத்துப்பாண்டி சண்முகம் மீது சந்தேகப்பட்டுடோமே என வருத்தம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.டீல் பேசிய மாயா.. ரேவதியை காப்பாற்ற கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மாயா ஏற்பாடு செய்த ஆட்கள் ரேவதியை கடத்திய நிலையில் இன்று, கார்த்திக் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ரேவதியை காணவில்லை என கம்பளைண்ட் கொடுக்கிறான். போலீஸ் நீங்க காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? சில பேர் பிடிக்காமல் கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு தற்கொலை பண்ணிக்கிறாங்க என்று சொல்கிறான்.  இதையடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்திக்கு போன் செய்து என்ன மாப்பிள்ளை எல்லாம் ஓகே தானே.. ரேவதி எதுவும் பிரச்சனை பண்ணலையே என்று விசாரிக்க இல்லை என்று சொல்கிறான்.சாமுண்டீஸ்வரி ரேவதியிடம் போனை கொடுக்க சொல்ல கார்த்திக் எதையோ சொல்லி சமாளித்து போனை வைக்கிறான். அடுத்து போலீஸ்க்கு ஒரு போன் வருகிறது. புது தாலியோட ஒரு பொண்ணோட டெட் பாடி கிடைத்திருப்பதாக சொல்லி கார்த்தியை அழைத்து சென்று அது ரேவதியா என அடையாளம் காட்ட சொல்கின்றனர். கார்த்திக் முகத்தை திறந்து பார்த்து அது ரேவதி இல்லை என அறிந்து நிம்மதி அடைகிறான்.தொடர்ந்து கார்த்திக்கு மாயாவிடம் இருந்து போன் கால் வருகிறது. அந்த காலில் ரேவதியை நான் தான் கடத்தி வச்சிருக்கேன். மகேஷ் எங்கே இருகானு சொல்லிடு, இல்லனா ரேவதியை கொன்னுடுவேன் என்று மிரட்டுகிறான். கார்த்திக் மகேஷ் எங்கே என்று எனக்கு தெரியாது என்று சொல்ல மாயா அதை நம்ப மறுக்கிறாள். அடுத்து ரேவதியை கடத்திய அடியாள் மனைவி அவனுக்கு போன் செய்து வீட்டு ஓனர் வாடகை கேட்டு பிரச்சனை செய்வதாக சொல்லி அழைக்க அவன் வீட்டிற்கு கிளம்பி செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடத்தப்படும் தியா.. கவினை பதம் பார்க்க திட்டம் போடும் மகேஷ் – கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மகேஷ் கவின் குறித்த விவரங்களை சேகரிக்க சொல்லிய நிலையில் இன்று, மோனிகாவால் முனுசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சந்தித்துக் கொள்கின்றனர். முனுசாமிக்கு ஒரு பெண் இருப்பது தெரிந்து வெற்றிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார் ஈஸ்வரமூர்த்தி. இன்னொரு பக்கம் கவினின் விவரங்கள் அனைத்தும் மகேஷுக்கு கிடைக்கிறது.நாளைக்கு இந்த இடத்துக்கு போய் அவனை ஒரு வழி பண்ணனும் என முடிவு எடுக்கிறான். அடுத்ததாக முருகன் ரேவதிக்காக ஹார்டின் போட்ட ஒரு லெட்டரை கொடுக்க இருவருக்கும் இடையே காதல் மலர தொடங்குகிறது. பிறகு மோனிகா தியாவை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாள். ஜெகனிடம் தியாவை நம்ம கூடவே வச்சுக்கலாம் என்று சொல்ல ஜெகன் அதுக்கு அந்த துளசி மேல ஏதாவது ஒரு கேஸ் போட்டு தான் குழந்தையை நம்ம கூட அழைத்து வர முடியும் என்று சொல்கிறான்.இதைத் தொடர்ந்து துளசியிடமிருந்து குழந்தையை கடத்தி அவள் மீது பொய் கேஸ் போட முடிவெடுக்கின்றனர். இவர்களை திட்டத்திற்கு ஏற்றவாறு துளசி மற்றும் தியா இருவரும் கடைக்கு வருகின்றனர். அப்போது ஜெகனின் ஆட்கள் குழந்தையை கடத்தி விட துளசி செய்வதறியாது நிற்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன