இலங்கை
கண்டி செல்லும் விசேட ரயில்கள் நிறுத்தம்

கண்டி செல்லும் விசேட ரயில்கள் நிறுத்தம்
கண்டி சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது மேலாளர் தெரிவித்தார்.
இன்றும் நாளையும் தலதா மாளிகை யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொள்வதால், பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.