பொழுதுபோக்கு
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான்-வாணி கபூர் நடித்த இந்தி படத்திற்கு தடை!

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான்-வாணி கபூர் நடித்த இந்தி படத்திற்கு தடை!
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்த அபீர் குலால் திரைப்படம் இந்தியாவில் வெளியிடப்படாது என்று அரசாங்க வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளன.ஆங்கிலத்தில் படிக்க: India pulls plug on Fawad Khan-Vaani Kapoor’s film Abir Gulaal after Pahalgam attackஒரு நாள் முன்னதாக, ஒரு பெரிய ராஜதந்திர குறைப்பாக, சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் சார்க் விசாக்களை நிறுத்தி வைப்பது உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதனிடையே வரும் மே 9 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த அபிர் குலால் திரைப்படத்தில் இந்திய நடிகை வாணி கபூரும் நடித்துள்ளார். முன்னதாக இந்தி படங்களான ஏ தில் ஹை முஷ்கில், கூப்சுரத் மற்றும் கபூர் & சன்ஸ் ஆகியவற்றில் நடித்த ஃபவாத் கான் இந்த படத்தின் மூலம் மீண்டும் பாலிவுட் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.உரி தாக்குதலுக்குப் பிறகு, மற்ற பாகிஸ்தான் கலைஞர்களுடன் சேர்ந்து, தாக்குதலைக் கண்டித்து அவர் சமூக ஊடகங்களில் அந்த தாக்குதல்கள் குறித்து பதிவிட்டிருந்தார். அதேபோல் பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு, பவாத் கான் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்தார். இதில், “பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதல் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. மேலும் இந்த கடினமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு வலிமை மற்றும் குணமடைய நாங்கள் பிரார்த்திக்கிறோம், ”என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதேபோல், இந்த சம்பவம் குறித்து சக நடிகை வாணி கபூர் வெளியிட்ட பதிவில், “பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டதிலிருந்து வார்த்தைகளால் அறியாமல் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். மனமுடைந்து போனேன். பேரழிவிற்கு ஆளானேன். எனது பிரார்த்தனைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FWICE) முன்னதாக பாகிஸ்தான் கலைஞர்கள் மீதான தடையை அறிவித்தது, “அபீர் குலால் இந்தியாவில் ரிலீஸ் ஆகாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்” என்றும் கூறியுள்ளது.இந்த தாக்குதலை கண்டித்து மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு (FWICE) நேற்று (ஏப்ரல் 23) வெளியிட்ட அறிக்கையில்,”இந்த தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து, கூட்டமைப்பு தேசிய நலன் மற்றும் ஒற்றுமைக்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பிப்ரவரி 18, 2019 அன்று வெளியிடப்பட்ட எங்கள் உத்தரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம், இந்திய திரைப்படம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள அனைத்து பாகிஸ்தான் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் முழுமையான ஒத்துழையாமையைக் கோருகிறோம் என்று கூறியுள்ளது.மேலும், அந்த அறிக்கையில் ஃபவாத் கான் மற்றும் வாணி கபூர் நடித்துள்ள அபீர் குலால், படத்தைப் பற்றியும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது: “இந்த தொடர்ச்சியான உத்தரவு இருந்தபோதிலும், இந்தி திரைப்படமான அபீர் குலால் படத்திற்காக பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கானுடன் சமீபத்தில் இணைந்து பணியாற்றியது குறித்து எங்களுக்குத் தெரியவந்துள்ளது. பஹல்காமில் சமீபத்தில் நடந்த தாக்குதலை அடுத்து, எந்தவொரு இந்திய திரைப்படம் அல்லது பொழுதுபோக்கு திட்டங்களிலும் பங்கேற்கும் அனைத்து பாகிஸ்தான் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் முழுமையாகப் புறக்கணிக்க கூட்டமைப்பு மீண்டும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உலகில் எங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகள் அல்லது ஒத்துழைப்புகளும் அடங்கும் என்று கூறியுள்ளது.முன்னதாக, தீவிர வலதுசாரி இந்து குழுவின் சட்ட சவால் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக 2022 ஆம் ஆண்டு அவரது பாகிஸ்தான் திரைப்படமான தி லெஜண்ட் ஆஃப் மௌலா ஜாட் படத்தின் இந்திய வெளியீடு நிறுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், கான் கதாநாயகர்களில் ஒருவராகக் கொண்ட கரண் ஜோஹரின் திரைப்படமான ஏ தில் ஹை முஷ்கில், ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா அதன் வெளியீட்டைத் தடுப்பதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து ரிலீஸ் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.