சினிமா
பாக்யராஜ் மகள் சரண்யா இந்த நடிகரை காதலித்தாரா? பிரபலம் கொடுத்த ஷாக்..

பாக்யராஜ் மகள் சரண்யா இந்த நடிகரை காதலித்தாரா? பிரபலம் கொடுத்த ஷாக்..
முன்னணி இயக்குநராக திகழ்ந்து 80, 90களில் கொடிக்கட்டி பறந்து வந்த பாக்யராஜ், நடிகை பூர்ணிமாவை இரண்டாவதாக திருமணம் செய்து சரண்யா, சாந்தனு என் குழந்தைகளை பெற்றெடுத்தார்.தற்போது சாந்தனு நடிகராக நடித்து வரும் நிலையில், மகள் சரண்யா ஒருசில படங்களில் நடித்தப்பின் வெளிநாட்டுக்கு சென்று படிப்பில் கவனம் செலுத்தினார். அதன்பின் காதல் தோல்வி ஏற்பட்டு 3 முறை தற்கொலை முயற்சியும் மேற்கொண்டு உயிர் தப்பினார்.இதன்பின் வெளியில் தலைக்காட்டாமல் இருந்த சரண்யா, தனக்கு ஆண் குழந்தை இருப்பதாக கூறி பேட்டியும் கொடுத்தார். அதேசமயம் அவரது கணவர் ஏமாற்றிவிட்டதாக செய்திகள் பரவியது. இதனால் தான் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டியில் பாக்யராஜ் மகள் சரண்யா பற்றிய சில தகவலை பகிர்ந்துள்ளார். இந்தத்தலைமுறையில் சிறு வயதிலேயே எல்லோரும் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.பாக்யராஜ் தன் மகள் சரண்யாவை வைத்து பாரிஜாதம் என்ற படத்தினை இயக்கினார். இயக்கம் மட்டுமில்லாமல் அதனை தயாரிக்கவும் செய்தார். பிரித்விராஜுடன் நடித்த இப்படம் சரண்யாவுக்கு தோல்வியை கொடுத்தது. அப்படத்தில் பாக்யராஜ் மகள் சரண்யா, பிரித்விராஜை நிஜமாகவே காதலிக்க ஆரம்பித்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன்.சரண்யா, பிரித்விராஜை திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தும் இதை பிரித்விராஜ் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதற்குகாரணம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலையை பிரித்விராஜ் இருந்தார். மலையாள சினிமாவில் நடித்து வந்த பிரித்விராஜ், சரண்யாவை கல்யாணம் செய்தால் மலையாளத்தில் வாய்ப்பு கிடைக்காது என்ற பயணத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு சரண்யா, பிரித்விராஜை காதலித்தார். ஆனால் பிரித்விராஜுக்கு ஆரம்பத்தில் இருந்தே அந்தக்காதலில் பெரிய ஈடுபாடு இல்லை. இருப்பினும் சிலபேர் அதை புரிந்துக்கொள்ளாமல் தான் நினைத்ததுதான் என்று இருப்பார்கள். அந்த சமயத்தில் சரண்யா, வயது ரீதியாகவும் ரொம்ப சின்ன பொண்ணாகவே இருந்தார்.நீங்கள் இன்னும் படங்கள் பண்ண வேண்டும் என்று வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். மகளின் ஆசையை நிறைவேற்ற ஒவ்வொரு தந்தையும் விரும்புவார்கள். அதனால் அதிலிருந்து மெல்ல செல்ல வெளியே வர ஆரம்பித்த சரண்யா, ஒரு பக்கம் தொழில், ஒரு பக்கம் தன் குழந்தை என்று இருக்கிறார் என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.