இலங்கை
வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி ; அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான வசதி

வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி ; அறிமுகப்படுத்தியுள்ள அசத்தலான வசதி
வாட்ஸ் அப்பில் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்-ஐ சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் வாட்ஸ் அப் பயனர்களுக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வரும் மெட்டா நிறுவனம், தற்போது பயனர்களுக்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் எளிய முறையில் இந்த செயலி இருப்பதால், பயனாளர்கள் மத்தியில் WhatsApp செயலிக்கு பெரும் வரவேற்பு இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.