சினிமா
இது என்ன கெட்டப்புடா சாமி..!– ‘சுமோ’ படம் பார்க்க வித்தியாசமான லுக்கில் வந்த கூல் சுரேஷ்!

இது என்ன கெட்டப்புடா சாமி..!– ‘சுமோ’ படம் பார்க்க வித்தியாசமான லுக்கில் வந்த கூல் சுரேஷ்!
தமிழ் சினிமாவில் எப்போது பார்த்தாலும் நம்மை சிரிக்க வைக்கும், ஏதாவது புதிய விடயத்தோடு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் தான் கூல் சுரேஷ். இவர் சமீபத்தில் வெளியான ‘சுமோ’ திரைப்படத்தை தியேட்டரில் சென்று நேரில் பார்த்திருந்தார். அதன்போது அவர் அணிந்திருந்த உடை தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.அவரது லுக்கினைப் பார்த்த ரசிகர்கள், “இது தியட்டரா இல்ல fashion showவா?” என இணையத்தில் கமெண்ட் செய்து ரெண்டாக்கி உள்ளனர். பொதுவாக நடிகர்கள் தியேட்டருக்கு வரும்போது நேர்த்தியான ஆடை, சினிமா உணர்வை பிரதிபலிக்கும் போஸ்கள், ரசிகர்களுடன் அரட்டைகள் என ஒழுங்கான சூழ்நிலை காணப்படும். ஆனால் கூல் சுரேஷ் வந்த முறை முற்றிலும் புதிதாக இருந்தது.அவரது அந்த லுக் குறித்த புகைப்படங்கள் தற்பொழுது அனைத்து வலைத்தளங்களிலும் பல்வேறு விதமாக பகிரப்பட்டு வருகின்றது. சில நொடிகளிலேயே அந்த வீடியோவை லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளனர். அவர் இந்த லுக்கை எதற்காக தேர்வு செய்தார் என்பது பற்றிய விளக்கம் அவர் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.