சினிமா
எதிர்பாராத விதமாக சிக்கலில் சிக்கிய ஏ.ஆர். ரகுமான்.! நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

எதிர்பாராத விதமாக சிக்கலில் சிக்கிய ஏ.ஆர். ரகுமான்.! நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.!
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் ஏ.ஆர். ரகுமான், தற்போது ஒரு காப்புரிமை வழக்கில் சிக்கியுள்ளார். “பொன்னியின் செல்வன் – 2” திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடலான “வீர ராஜா வீரா” தான் இந்த சர்ச்சையில் சிக்கியதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தப் பாடல், மக்களின் உள்ளங்களைத் தொட்ட ஒரு மெலோடியான பாடலாக அனைத்து இசை ரசிகர்களிடமும் வரவேற்கப்பட்டது. எனினும், தற்போது அந்தப் பாடலில் பண்டைய சிவ ஸ்துதி பக்திப் பாடலின் சில வரிகள் மற்றும் இசைஅமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கைப் பதிவு செய்தவர் தாகர் சுப்ரமணியன் ஆவார். அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “எனது குடும்பத்தில் உள்ளவர்கள் தத்துவக் கவிஞர்கள். என் தந்தை மற்றும் தாத்தா இருவரும் ‘சிவ ஸ்துதி’ என்ற பக்திப் பாடலை தாங்களாகவே எழுதி, இசை அமைத்து, மக்கள் மத்தியில் பரப்பியவர்கள். இந்த பாடலின் சில பகுதிகள் எனது அனுமதியின்றி, பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.” எனக் கூறியிருந்தார்.இதனை அடுத்து, இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணையின் போது, ஏ.ஆர். ரகுமான் தரப்பில் இருந்து அதிர்ச்சியூட்டும் வாதம் ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், “நாங்கள் ‘சிவ ஸ்துதி’ பாடலைக் கேட்டு ஈர்க்கப்பட்டோம். அதன் சாரத்தையும் அதன் தத்துவ அமைப்பையும் பின்பற்றி ‘வீர ராஜா வீரா’ உருவாக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்திருந்தார்.இந்த வழக்கில், மனுதாரரின் உணர்வுகள் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனக் கூறிய நீதிமன்றத்தில் , “தற்காலிக தீர்வாக,ஏ.ஆர். ரகுமான் ரூ.2 கோடியை நீதிமன்றத்தின் பதிவாளரிடம் செலுத்த வேண்டும்.” எனக் கூறியுள்ளனர்.