பொழுதுபோக்கு
எல்.2 எம்புரான் முதல் வீர தீர சூரன் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியான பெரிய படங்கள்!

எல்.2 எம்புரான் முதல் வீர தீர சூரன் வரை: இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியான பெரிய படங்கள்!
திரையரங்குகளில் வாரந்தோறும் வெளியாகும் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை போல், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்து எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளத்தில் வெளியான 2 பெரிய படங்கள் குறித்து பார்ப்போம்.மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் 2-ம் பாகம் எல்2 எம்புரான் திரைப்படம். கடந்த மார்ச் 27ம் தேதி வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. இப்படம் நேற்று (ஏப்ரல் 24) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது.கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியான திரைப்படம் தருணம். அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் வெளியான இந்த படத்தில, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டது. இப்படம் இன்று (ஏப்ரல் 25) டென்ட்கோட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது.மலையாள திரைப்படம் ஏ.எம்.ஏ.எச் (Am Ah) படத்தை தாமஸ் செபாஸ்டியன் இயக்கியிருந்தார். ஊருக்கு சாலை போட வந்த காண்ட்ராக்டர், அந்த ஊரில் கூலி வேலை செய்து தனது 4 வயது மகனை பத்திரமாக பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணின் செயலை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார். அவர் உண்மையில் காண்ட்ராக்டர் தானா என்ற கேள்விக்கு விடை சொல்லும் இந்த படம், இன்று (ஏப்ரல் 25)நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.சேதுபதி, சித்தா போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டஇயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வீர தீர சூரன் 2’. மதுரையை கதைக்களமாக எடுக்கப்பட்ட இப்படம் 70 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அசத்தியது. இப்படம் நேற்று (ஏப்ரல் 24) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த படங்களில், எல்2 எம்புரான், வீர தீர சூரன் 2 ஆகிய இரு படங்களும் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியான நிலையில், ஒடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.