Connect with us

இலங்கை

கண்டியில் இராணுவ வீரரை தீட்டிய பொலிஸ்; விசாரணைக்கு உத்தரவு

Published

on

Loading

கண்டியில் இராணுவ வீரரை தீட்டிய பொலிஸ்; விசாரணைக்கு உத்தரவு

  வரலாற்று சிறப்புமிக்க கண்டியில் இடம்பெற்று வரும் ஶ்ரீ தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இந்நிலையில் அது தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த வீடியோ காட்சியில் போக்குவரத்து கடமை சீருடையில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை அங்கிருந்து செல்லுமாறு கடுமையான வார்த்தை பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் பதில் பொலிஸ் மாஅதிபரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பணித்துள்ளார்.

அதற்கமைய, கண்டி மாவட்டம் 1 இற்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement

விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் உத்தியோகத்தர் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன