இலங்கை
கள்ள உறவை அம்பலப்படுத்திய மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்!

கள்ள உறவை அம்பலப்படுத்திய மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்!
திருமணமான பெண்ணுடன் கண்வனின் கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்திய மனைவியை , கணவன் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெலுங்கானா அடிலாபாத் மாவட்டம், குடிஹட்னூரை சேர்ந்தவர் மாருதி. பால் வியாபாரி.
இவரது மனைவி கீர்த்தி (வயது 30). தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், மாருதிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
இது தொடர்பில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது. கணவர் கள்ளக்காதலை கைவிடாததால் ஊர் பெரியவர்களை கூட்டி பஞ்சாயத்து வைத்தார்.
பஞ்சாயத்தில் மாருதி கள்ளக்காதலை கைவிட்டு தனது குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக் கொள்கிறேன் என உறுதி அளித்தார்.
எனினும் பஞ்சாயத்தில் வைத்து தன்னை அசிங்கப்படுத்திய மனைவியை கொலை செய்ய வேண்டும் என மனதில் வஞ்சகம் வைத்தார்.
இதனனையடுத்து கடந்த வாரம் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று (24) மாமனார், மாமியார் வேலைக்கு சென்ற பின், கீர்த்தி வீதியோர குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றார்.
கத்தியுடன் மனைவியை பின் தொடர்ந்து சென்ற மாருதி நடு வீதியில் அவரை கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்தபோது , அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பொதுமக்கள் வருவதை கண்ட மாருதி அங்கிருந்து தப்பிச் சென்றார். அங்கிருந்தவர்கள் கீர்த்தியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் கீர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.