இலங்கை
சுண்டிக்குளத்தில் பெரும் தொகை கேரள கஞ்சா

சுண்டிக்குளத்தில் பெரும் தொகை கேரள கஞ்சா
கிளிநொச்சி – சுண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (24) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி மணற்காடு பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் ஆவார்.
இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 108 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலுதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.