Connect with us

சினிமா

“டிராகன்” படத்தால் நிகழ்ந்த விபரீதம்..! ஆள்மாறாட்டம் செய்து வசமாக சிக்கிய இளைஞர்..!

Published

on

Loading

“டிராகன்” படத்தால் நிகழ்ந்த விபரீதம்..! ஆள்மாறாட்டம் செய்து வசமாக சிக்கிய இளைஞர்..!

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் ஒரு வேலைக்கு தேர்வாகுவதற்கான போட்டி மிக மோசமாகவே இருக்கின்றது. அதே சமயம், அந்த போட்டியைச் சமாளிக்க சிலர் தவறான வழியிலும் இறங்குகிறார்கள். அதற்கான சாட்சியமாக, தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களிலும், IT துறையிலும் பரபரப்பாக பேசப்படுகின்றது.இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடந்துள்ளது. இங்கே வேலைக்கு சேருவதற்கு முன்னர் நடந்த விர்ச்சுவல் இன்டர்வியூ ஒன்றில், ராபா சாய் பிரசாந்த் என்ற நபர் வேறு ஒருவர் மூலம் கதைத்து வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.அதாவது, நேரில் எதிர்கொள்வது கடினமாக இருக்கும் என்பதால், Zoom வாயிலாக நடந்த முகாமைத்துவத் தேர்வில், இது போன்ற முறையில் நேரடியாகவே பங்குபெறாமல் அவர் மற்றொருவரை வைத்து பதிலளிக்க வைத்துள்ளார்.இன்டர்வியூவில் ஆங்கிலத்தில் பேசிய நபர், பணியில் சேர்ந்தவுடன் சாதாரணமாக கதைக்கவே தடுமாற ஆரம்பித்துள்ளார். இதனால் சக ஊழியர்கள் அவர் மீது சந்தேகம் கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட பலரும் இது ” டிராகன்” படத்தில நடந்த சீன் மாதிரியே இருக்கு என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நிஜத்தில் இப்படியான சம்பவங்கள் இடம்பெற திரைப்படங்களே முக்கிய காரணம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன