வணிகம்
தங்கம் விலையை விட நல்ல லாபம்? கோல்டு பீஸ் முதலீடு எப்படி செய்யலாம்?

தங்கம் விலையை விட நல்ல லாபம்? கோல்டு பீஸ் முதலீடு எப்படி செய்யலாம்?
தங்கத்தை நகையாக வாங்க விரும்பாமல் அதில் முதலீடு செய்து பலனை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கோல்டு பீஸ் ஏற்றதாக இருக்கும். இதனை கோல்டு பென்ச்மார்க் எக்ஸ்சேன்ஞ் ட்ரேடர் ஸ்கீம் என்று கூறுவார்கள். குறிப்பாக, 0.1 கிராம் அளவில் இருந்து கூட தங்கத்தை முதலீடு செய்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் தங்கதை 12 மாதங்களுக்கு பின்னர் விற்கும் போது 12.5 சதவீத வட்டி விதிக்கப்படும். 12 மாதங்களுக்குள் விற்கும் போது 20 சதவீதம் வட்டி விதிக்கப்படும்.கோல்டு பீஸ்-ஐ பொறுத்த வரை தங்கத்தின் விலை என்னவாக இருக்கிறதோ அதே விலைக்கு அப்படியே வாங்கலாம். மேலும், 24 கேரட்டாக வாங்க முடியும். தங்கம் வளரும் போது, கோல்டு பீஸ்-உம் வளரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக, கோல்டு பீஸ்-ல் செய்கூலி மற்றும் சேதாரம் போன்றவை கிடையாது. உதாரணமாக, நகையாக தங்கத்தை வாங்கும் போது ஒரு கிராம் தங்கத்தின் விலையை விட கூடுதலாக இருக்கும். செய்கூலி, சேதாரம் மற்றும் ஜி.எஸ்.டி போன்றவை இதற்கு காரணமாக அமையும்.ஆனால், கோல்டு பீஸ் என்று வரும் போது நம்முடைய முதலீடு முழுவதும் தங்கமாக மாறி இருக்கும். எனினும், நகை வடிவத்தில் அதனை நம் கைகளில் பார்க்க முடியாது. நகை வடிவத்தில் பார்ப்பது மட்டுமே தங்கம் என்று நினைத்தால், டிஜிட்டல் முறையில் தங்கத்தை முதலீடு செய்ய முடியாது.அதன்படி, முதலீடு என்ற முறையில் தங்கத்தை அணுகினால் இந்த கோல்டு பீஸ் உபயோகமாக இருக்கும். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்காகவே கோல்டு பீஸ் உருவாகி இருக்கிறது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.இதனை வாங்குவதற்காக டிமேட் கணக்கு தொடங்க வேண்டும். நாம் சாதாரண சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே இதனை பெறலாம். பெரும்பாலும் அனைத்து வங்கிகளும் தற்போது டிமேட் கணக்கு சேவையை வழங்குகின்றனர்.சேமிப்பு கணக்கில் பணத்தை முதலீடு செய்வது போன்று, டேமிட் கணக்கில் சிறுகச் சிறுக பணத்தை சேமித்து தங்கத்தில் முதலீடு செய்யலாம். இவ்வாறு செய்யும் போது குறிப்பிட்ட காலத்தில் இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.கோல்டு பீஸ்-ல் முதலீடு செய்யும் போது தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களின் அடிப்படையில் லாபம் பார்க்க முடியும். எனவே, சரியான முறையை பின்பற்றி முதலீடு செய்யும் போது அதன் பலன் நிச்சயமாக அதிகரிக்கும்.நன்றி – IBC Tamil Youtube Channel