சினிமா
தெலுங்கு திரையுலகில் என்ட்ரியாகும் நடிகர் சூர்யா..!ஹீரோயினி யார் தெரியுமா..?

தெலுங்கு திரையுலகில் என்ட்ரியாகும் நடிகர் சூர்யா..!ஹீரோயினி யார் தெரியுமா..?
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, இப்பொழுது தெலுங்குப் படத்திற்குள் தீவிரமாக இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘லக்கி பாஸ்கர்’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்த புதிய தெலுங்குப் படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது வெங்கி – சூர்யா கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்றாலும், ரசிகர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் மற்றொரு விடயமும் அதில் உள்ளது. அது என்னவெனில் நடிகை கீர்த்தி சுரேஷ் அப்படத்தில் ஹீரோயினாக இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இணைந்து நடித்த சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ், அந்தப் படத்தின் சாதனையால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றனர். இப்பொழுது மீண்டும் ஒரே படத்தில் இணைவதென்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.இத்தகவல் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை சூர்யா தெலுங்கில் டப்பிங் மூலம் பல வெற்றிகளைக் கண்டிருந்தாலும், இதுவே ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக தெலுங்கானா பகுதிகளில் இருக்கும் ரசிகர்களிடையே நேரடித் தொடர்பை உருவாக்கும் திட்டம் எனவும் இதனை சிலர் குறிப்பிடுகின்றனர்.