இலங்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து ; 28 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கோர விபத்து ; 28 பேர் காயம்
மஹியங்கனை – திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.