வணிகம்
புதிய உச்சத்தில் தங்கம் விலை… எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?

புதிய உச்சத்தில் தங்கம் விலை… எப்படி முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?
தங்கத்தின் விலை நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று தற்போது நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால், எந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான லாபத்தை பெற முடியும் என்ற கேள்வி இருக்கும். அதற்கான விளக்கத்தை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்.குறைந்தபட்சமாக எவ்வளவு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும். உதாரணமாக, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 8500 என்று எடுத்துக் கொள்ளலாம். இதனை நகையாக வாங்கும் போது செய்கூலி மற்றும் சேதாரம் என்று ரூ. 10000-வரை செலவாகக் கூடும்.ஆனால், டிஜிட்டலாக தங்கத்தை சேமிக்க தொடங்கினால் ஒரு ரூபாயில் இருந்து கூட தங்கத்தை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தவிர பங்குச்சந்தைகளில் இ.டி.எஃப்-ஆக முதலீடு செய்ய ரூ. 50 கூட போதுமானதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதேபோல், கோல்டு பாண்டாக முதலீடு செய்தால் ஒரு கிராம் தங்கத்தின் விலையை அப்படியே முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும்.தங்கத்தை நகையாக வாங்கினாலும், பாண்டாக வாங்கினாலும் ஒரு கிராமில் இருந்து தான் வாங்க வேண்டியதாக இருக்கும். டிஜிட்டல் மற்றும் இ.டி.எஃப்-களில் இவ்வாறு இல்லை. ஒரு ரூபாய் அல்லது ரூ. 50 முதல் ரூ. 60 என்ற தொகையில் கூட முதலீடு செய்ய முடியும். அதன்படி, நமக்கு ஏற்ற முதலீடு எது என்பதை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.தங்கத்தை பொறுத்த வரை எஸ்டிமேட்டட் ரிட்டர்ன் என்று சொல்லக் கூடிய லாபம் 9 சதவீதம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால், தங்கத்தை நகையாக வாங்கும் போது அது 7 சதவீதம் மட்டுமே ரிட்டர்ன் ரேட் கொடுக்கும். ஏனெனில், அதில் ஜி.எஸ்.டி, செய்கூலி மற்றும் சேதாரம் போன்றவை பார்க்கப்படுகிறது.டிஜிட்டல் தங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் ரிட்டர்ன் ரேட் 8 சதவீதம் இருக்கும். இதுவே இ.டி.எஃப் முதலீட்டில் 8.9 சதவீதம் லாபம் கிடைக்கும். ஆனால், கோல்டு பாண்டுகளில் வட்டியுடன் சேர்த்து 11.5 சதவீதல் லாபம் கிடைக்கும். நகைகளாக வாங்கும் தங்கத்தை பாதுகாப்பதில் தொடங்கி நிறைய அபாயம் இருக்கிறது.டிஜிட்டல் தங்கத்தில் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால், இதிலும் ஓரளவிற்கு அபாயம் இருக்கிறது. இ.டி.எஃப்-ஐ செபி கண்காணிக்கின்றனர். இதன் காரணமாக, இ.டி.எஃப் முதலீட்டு முறையில் அபாயம் குறைவாக இருக்கிறது. எனினும், கோல்டு பாண்டுகளை பொறுத்தவரை அரசே இத்திட்டத்தை மேற்கொள்வதால் அபாயம் இல்லை என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.அந்த வகையில் நம்முடைய தேவை அறிந்து தங்கத்தில் முதலீடு செய்யும் போது அதற்கான முழு பலனையும் நாம் பெற முடியும்.நன்றி – Boss Wallah (Tamil) Youtube Channel