Connect with us

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் இப்படியும் சம்பவம்; மருத்துவருக்கே இந்த நிலையா!

Published

on

Loading

யாழ் போதனா வைத்தியசாலையில் இப்படியும் சம்பவம்; மருத்துவருக்கே இந்த நிலையா!

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் ஆயிரம் பிராங் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் கைதான வைத்தியசாலை பணியாளர் ஒருவர் நேற்றைய தினம் (24) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியரின் உடைமையில் இருந்த பணம் காணாமல் போனமை தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் வைத்தியரால் முறைப்படு செய்யப்பட்டது.

Advertisement

இதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வைத்தியசாலை பணியாளர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து   விசாரணைகளின் பின்னர்  யாழ் . நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்ற விசாரணைகளின் பின்னர் , சந்தேகநபரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.

அதேவேளை , யாழ் . போதனா வைத்திசாலையில் தொலைபேசிகள் , பணம் என்பவை களவு போகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Advertisement

எனவே வைத்தியசாலைக்கு வருவோர் பெறுமதியான உடமைகளை தம்முடன் எடுத்து வர வேண்டாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன