சினிமா
விவேக்கின் இறுதிச்சடங்குக்கு ஏன் போகவில்லை.. மனம் திறந்த வடிவேலு

விவேக்கின் இறுதிச்சடங்குக்கு ஏன் போகவில்லை.. மனம் திறந்த வடிவேலு
நடிகர் வடிவேலு நகைச்சுவை கிங் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 35 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்தார்.இடையில், 5 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தடை செய்யப்பட்டு இருந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.அதன்படி, சில தினங்களுக்கு முன் சுந்தர் சி – வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் வெளிவந்தது. காமெடி நடிகர் விவேக் மறைவுக்கு பின் வடிவேலு இந்த விஷயம் குறித்து எதுவும் பேசாமல் இருந்தார்.இந்நிலையில், கேங்கர்ஸ் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு அவர்களிடம் விவேக்கிற்கு இறுதி மரியாதை செலுத்த வராதது ஏன் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ” விவேக்கின் இறப்பு எனக்கு தாங்க முடியாத வலி. அவரது இறப்பிற்கு நான் போகவில்லை என பலர் என்னிடம் கேட்டார்கள், ஆனால் வீட்டுக்கு எல்லாம் சென்று, விவேக்கின் மனைவி, குழந்தைகள் அனைவரிடமும் துக்கம் விசாரித்தேன்.விவேக் இறப்பான் என நான் நினைக்கவில்லை, அவன் இறந்த காலகட்டத்தில் நான் மிகவும் மோசமாகத்தான் இருந்தேன். எங்கள் வீட்டுலயே ஒருத்தரை ஒருத்தர் பார்த்து பயந்து கொண்டு இருந்தார்கள். அதனால்தான் போகவில்லை” என கண்கலங்கி கூறியுள்ளார்.