Connect with us

பொழுதுபோக்கு

25-வது திருமண நாள்; மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அஜித்: வைரல் வீடியோ

Published

on

Ajth Shalini Wedding

Loading

25-வது திருமண நாள்; மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய அஜித்: வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் – ஷாலினி தம்பதி தங்கள் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய வீடியொ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்குமு் அஜித், தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். எவ்வித சினிமா பின்புலமும் இல்லாமல், தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த, அஜித், நடிப்பு மட்டுமல்லாமல், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது அணியுடன் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் பங்கேற்று வருகிறார்.அதேபோல், அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விடா முயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்தது. தற்போது கார் ரேஸில் பங்கேற்றுள்ள அஜித், அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் கார் பந்தயத்தில் அவர் வெற்றி பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.1999-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷாலினி, அதே ஆண்டு வெளியான அமர்கலம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். சரண் இயக்கததில் வெளியான இந்த படத்தில், ஜோடியாக நடித்த அஜித் ஷாலினி இருவரும் காதலித்து கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு, அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.A post shared by Shalini Ajith Kumar (@shaliniajithkumar2022)இவர்களது திருமணம் ஏப்ரல் 24, 2000-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது. திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதனிடையே தற்போது அஜித் – ஷாலினி இருவரும் கேக் வெட்டி தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன