சினிமா
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை ஷாக் அடைய வைத்த அஜித்..!நடந்தது என்ன..?

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை ஷாக் அடைய வைத்த அஜித்..!நடந்தது என்ன..?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 10ம் திகதி வெளியான திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்திருந்தார். மாஸான கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெற்றது.’குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை திரையில் கவர்ந்திருந்தார். இவரது கதாப்பாத்திரம் சாதாரண மாஸ் ஹீரோவாக அல்லாமல், ஒரு அழுத்தமான கதைக்களத்துடன் காணப்பட்டது. ஆதிக் ரவிச்சந்திரன், முன்னர் ‘மீசைய முறுக்கு’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் என்பதால், ‘குட் பேட் அக்லி’ மீதும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை சாதகமாக மாற்றி இந்தப் படம் அமோக வசூலைப் பெற்றுள்ளது.திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே, உலகம் முழுவதும் ரூ. 173 கோடிக்கு மேல் வசூல் செய்துவிட்டது என்பது மிகப்பெரிய சாதனையாகும். இது அஜித் படங்களுக்கு இருக்கும் அபாரமான ரசிகர் மன்றங்களின் சக்தியை மீண்டும் நிரூபித்து விட்டது. ‘குட் பேட் அக்லி’ தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றது. இதனால் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.